படைப்புழு கட்டுப்பாட்டை செயல்முறையாக காட்டிய J.k.k. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள்...
February 23, 2023
0
J.k.k. முனி ராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தில் கோபி வட்டாரத்தில் படைப்புழு கட்டுப்பாட்டை செயல்முறையாக காட்டினார்கள். கூவலூர் வள்ளலார் காலனியை சேர்ந்த சௌந்தரநாயகி என்பவருக்கு 3 ஏக்கர் நிலம் ஆரம்பத்தில் தரிசாக இருந்தது. பின்னர் தன் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். முதல் 45 நாட்கள் பசுந்தால் உரம் வளர்த்து வந்தார். இப்போது பல பயிர் முறையை பின்பற்றி பருப்பு, பாதாம், சப்போட்டா போன்றவற்றை பயிரிடப்பட்டுள்ளார். மக்காச்சோளத்தில் படைப்பு சேதம் ஏற்படுத்துவதை J.k.k முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் கண்டறிந்து அங்கு வேளாண் அலுவலர் A.O. சந்திரசேகரன் தலைமையில் அதற்கான மேலாண்மை செயல்முறையாக காட்டி, கோடை உழவு ஒரு ஏக்கர் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இன கவர்ச்சி பொறி 5 ஏக்கர் வரப்பு பயிர் சூரியகாந்தி தட்டைப்பயிர் ஆகியவற்றிற்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.