ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சித்தோடு ஓடக்காடு பகுதியிலுள்ள 180 பயனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு தட்டு வழங்கப்பட்டது.
March 01, 2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக ஈரோடு ஒன்றியம் சார்பாக ஈரோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தோடு ஓடக்காடு பகுதியிலுள்ள 180 பயனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு தட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களும் ஈரோடு ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம் அவர்களும் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.