கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பொருளில் "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற தலைப்பில், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெறுகிறது.
இந்த வாரம் பேருந்து நிலைய பகுதி, நகராட்சி பூங்கா மற்றும் சாரதா மாரியம்மன் கோவில் பகுதியிலும் நடைபெற்ற சிறப்பு துப்புரவு பணி முகாமில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் தலைமையில், ஆணையாளர் பிரேம் ஆனந்த் அவர்கள் முன்னிலையில் நகர் மன்ற உறுப்பினர்கள் சரோஜா, மூர்த்தி, ஹக்கீம், வாணி ஸ்ரீ, ராமர், பல்வேறு நல சங்கங்களின் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட துப்புரவு பணி முகாம் நடைபெறுகிறது. இதில் திடக்கழிவு மேலாண்மையில் ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் குப்பைகளை தெருக்களில் கொட்ட மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். சாலையின் மத்தியில் சேர்த்துள்ள மண் திட்டுகளை அகற்றியும், போஸ்டர்களை கிழித்தும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், சமுதாய அமைப்பாளர் ஈஸ்வர மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
துப்புரவு பணி மேற்பார்வையாளர் பூங்கொடி, பழனிச்சாமி, சக்திவேலு, விஜயன், செல்வகுமார், விஸ்வநாதன் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் பூங்கொடி, கிருஷ்ணன், காளியம்மாள், அருண் பிரனேஷ், மஞ்சுநாதன், வைஷ்ணவி மேற்பார்வையாளர்கள் அருள் பிரசாத், சத்யா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.