ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டமானது திருப்பூர் மெயின்ரோடு சிந்துகேஸ் ஏஜென்சி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் குறிஞ்சிசேகர் மற்றும் பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்துமுன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், குமார், மாவட்ட செயலாளர்கள் பாமுருகன், சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, தனுஷ், கார்த்தி, தழிழ்செல்வன், C.கார்த்திக், மணிகண்டபிரபு, கோபி நகர தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஈரோடு மேற்கு மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், வருகின்ற 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியின் சார்பாக கோபியில் நடைபெறவுள்ள இந்துமுன்னணியின் திருப்பூர் கோட்ட பொதுக்குழுவினை சிறப்பான முறையில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.