கொங்கு மண்டல மக்களின் நீண்ட கால கோரிக்கையான அவிநாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தி பணிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த கால ஆட்சியாளர்கள் இத்திட்டத்தில் பெருந்துறை, நம்பியூர், அவிநாசி, பவானிசாகர் ஆகிய ஒன்றியங்களில் பல குளம் குட்டைகள் திட்டமிட்டு சேர்க்காமல் தவிர்க்கப்பட்டது, எனவே இரண்டாவது செயல்முறை திட்டத்தில் இவற்றை இணைத்து செயல்படுத்திட தமிழக அரசை வலியுறுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சண்முகம், கவுந்தி மணி, கணேசமூர்த்தி, கொங்கு மாதேஷ், விஜய், கதிர்வேல், சௌந்தர்ராஜன், வெல்கம் முருகேஷ், வேலுச்சாமி, சுரேஷ், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையத்தில் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற கழகம் சார்பில் டாக்டர் கீதா வேலாயுதசாமிக்கு பாராட்டு விழா
March 21, 2023
0
ஈரோடு மேற்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற கழகம் மற்றும் இளைஞர் அணி நடத்திய டாக்டர் கீதா வேலாயுதசாமிக்கு பாராட்டு விழா மற்றும் செயல் விளக்க கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நவீன் என்கின்ற குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் கொ வே ச முன்னேற்றக் கழக பொறுப்பாளர் சண்முகம் முன்னிலை வகிக்க, பவானி ஒன்றிய செயலாளர் பூமிஸ்குமார் வரவேற்புரை வழங்கினார்.