தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோபி பஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்க கொடியேற்றம்...
March 20, 2023
0
கோபி நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோபி பஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்க கொடியேற்றி வைத்து பொதுமக்கள் பலன்பெரும் விதமாக கோடைகால நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது. விழாவில் ஈரோடு மாவட்ட மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.M.பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு மக்கள் இயக்க கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். விழாவில் கோபி நகர தலைவர் உங்கள் சேவகன் எம் ஆனந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். கோபி நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் கோபி நகர மகளிர் அணி தலைவி சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூரம்பட்டி நகர தலைவர் மணி அவர்களும், கோபி ஒன்றிய தலைவர் பிரதீப் குமார் அவர்களும், நம்பியூர் ஒன்றிய தலைவர் சந்திரசேகரன் அவர்களும், நம்பியூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் அன்பு அவர்களும், அந்தியூர் நகர மகளிர் அணி தலைவி கோமதி அவர்களும் கலந்து கொண்டனர். கோபி நகர நிர்வாகிகள் சுகுமார், விக்னேஷ், கோவிந்தன், நித்தின் நடராஜ், திருமூர்த்தி, கணேஷ், மாதேஷ், கார்த்தி, தங்கராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் லலிதா, கௌரி, நந்தினி, ஜனனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.