கோபிசெட்டிபாளையம் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் அவர்களின் உத்தரவின்படி கோபிசெட்டிபாளையம் நகராட்சியும், கோபி உழவன் ரோட்டரி சங்கமும் இணைந்து "தூய்மை திருவிழா" நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக் சௌந்தரராஜன், உழவன் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணகுமார், கோபி ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி, வைரவிழா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி, சமுதாய அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வைரவிழா முதல் நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் நடத்திய திடக்கழிவு மேலாண்மை குறித்த பேச்சு போட்டி, நாடகம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப் போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் வீடுகள் தோறும் மக்கும் மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுப்பது மட்டுமில்லாமல், குப்பைகள் உருவாவதை குறைப்பது மற்றும் பயன்பாட்டுக்கு பயன்படும் பொருள்களை மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழிவுகள் உருவாகா வண்ணம், துணியினால் ஆன பேனர் பயன்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு, காரம், தேநீர் ஆகியவை அனைத்தும் சில்வர் தட்டு மற்றும் சில்வர் டம்ளர்களில் மட்டுமே வழங்கப்பட்டு குப்பையே உருவாகாத முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.