ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட வேலாயுத சுவாமி திருக்கோவில், கொங்கு திருமண மண்டபத்தில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மனதின் குரல் நூறாவது ஒளிபரப்பை பொதுமக்கள் காணும் பொருட்டு நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பாரத பிரதமரின் உரையை கேட்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பொதுமக்களுக்கு நிகழ்ச்சியின் சிறப்பை பற்றி எடுத்துக் கூறியும் மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறும் என்பதையும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டம், கொடுமுடி மேற்கு மண்டல் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், மண்டல் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கார்த்திக், மண்டல் பொருளாளர் வடிவேல் , ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட பொது செயலாளர் யுவராஜ், மண்டல விவசாய அணி தலைவர் ரமேஷ் பொன்வேல், மூத்த காரியகர்த்தா நமச்சிவாயம், விசுவநாதன் மற்றும் மண்டல நிர்வாகிகள் பழனிச்சாமி ,கலைவாணி, கொரடா சங்கர் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.