வீரப்பன் சத்திரம் தொடக்கப்பள்ளியில் 110 வது ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் ஒளிரும் ஈரோடு, மாநகராட்சி பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான இருக்கைகள் வழங்கும் விழா மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசு வழங்கும் விழா மற்றும் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஈரோடு வீட்டு வசதி துறை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி.செல்வராஜ், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் எம்.சின்னசாமி, செயலாளர் எஸ்.கணேசன் மற்றும் எம்.சி.ஆர் இணைச்செயலாளர் ராபின் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளிகள் பயிலும் மாணவர்களுக்கான இருக்கைகள் வழங்கினார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துனைத்தலைவர் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர். இதில் வார்டு கவுன்சிலர்கள் வனிதாமணி ஜெயக்குமார், செல்லப் பொன்னி மனோகர், ந.மல்லிகா நடராஜன், த.சுகந்தி தங்கமணி, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். அடுத்த பள்ளிகளில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் கலை நிகழ்ச்சி கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாக்குழு செய்திருந்தனர்.