பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம் பெருந்துறை நகர் சார்பாக 16.05.2023 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்தப் பிரச்சனை அனைத்தும் உடனடியாக சரி செய்து மாமன்ற கூட்டத்தினை விரைந்து நடத்த வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம் பெருந்துறை நகர் சார்பாக பெருந்துறை நகர்மன்ற தலைவர் பூர்ணச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் V.C.வேதானந்தம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சி கே சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் உடன் மாவட்ட பொதுச் செயலாளர் ராயல் K.சரவணன் அவர்களும், மாவட்ட செயலாளர் ஆடிட்டர் கோபால் அவர்களும், S.சுகன்யா மாவட்ட மகளிரணி துணை தலைவர், தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் தனசேகரன், இளைஞரணி மாவட்ட தலைவர் கே டி எஸ் கவின், தெற்கு மண்டல தலைவர் எஸ் எஸ் சுப்பிரமணி, வடக்கு மண்டல் தலைவர் கிருஷ்ணன், தெற்கு மண்டல் இளைஞரணி நவீன் குமார், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் நவீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் R.கௌரி சங்கர், அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.