கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் நகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் மற்றும் பேருந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகள், பேனர்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நகரின் பிரதான சாலை, புதிய ஆஸ்பத்திரி வீதி, பதிவிலாஸ் ரோடு, மார்க்கெட் பகுதிகள் போன்றவற்றில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனர்களை நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் உதவியுடன் 30 க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றி லாரியில் ஏற்றி சென்றனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவக்குமார் உத்தரவின்படி, நகரமைப்பு ஆய்வாளர் ஜானகிராமன், சுகாதார அலுவலர் சோழராஜ், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் ஆகியோருடன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சக்திவேலு, விஜயன், பழனிச்சாமி ஆகியோரும் பேனர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.