கோபிசெட்டிபாளையம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வன்பொருள் பயிற்சிப்பட்டறை (hardware training workshop) 27.06.2023 முதல் 30.06.2023 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
இப்பயிற்சியில் கணிப்பொறி வன்பொருள் பயிற்சியாளர் திரு. டி. மணிகண்டன், ஸ்ரீதரன் இன்போடெக் (ஈரோடு) ஆகியோர் கலந்து கொண்டு கணிப்பொறியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து, மீண்டும் இணைப்பது எப்படி என்பதை மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும் ஒவ்வொரு வன்பொருளையும் நேரடியாக காண்பித்து அதன் பயன்பாடுகளை விளக்கினர். அதன்பிறகு மாணவர்களை பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் கணினியை கையில் கொடுத்து பிரித்து ஒருங்கிணைக்கும்படி கூறி அதற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கினர்.
மாணவர்களும் ஆர்வத்துடன் இந்த நேரடி பயிற்சியில் ஈடுபட்டு தங்களின் கணினி வன்பொருள் அறிவை மேம்படுத்திக்கொண்டனர்.
முதலாமாண்டு துறைத்தலைவர் திருமதி. ஓ.எஸ். தேன்மொழி அவர்கள் இப்பயிற்சிபட்டறைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.