யார் இந்த M.A. ஈஸ்வரன்...
ஏன் அவர் பெயர் வைக்கப்படுகிறது என்பதை இந்தப் பெயர் வைக்கப்படுவதற்கு பெரும் முன்னெடுப்புகளை செய்த சக்ரா அறக்கட்டளை நிறுவனர் திரைப்பட இயக்குனர் திரு ராஜசேகர் நம்மிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார், ஈரோடு மாவட்டத்தின் ஒரு பொக்கிஷமாக கருதப்பட வேண்டிய ஒரு மாமனிதர் மக்களின் கவனத்தை ஈர்க்காமல் மறைந்து போன சோகத்தை என்னவென்று சொல்வது ...?
ஈரோடு சக்ரா அறக்கட்டளை மறைந்து போன அந்த மாமனிதரை இப்பொழுது தமிழ் மக்களின் கண் முன்னே கொண்டு வருவதில் பெருமை அடைகிறது... ஆம் அந்த மாமனிதரின் பெயர் அர்த்த நாரீஸ்வரர் பிள்ளை என்ற எம் ஏ ஈஸ்வரன் அவர்கள்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் 10 ஏக்கருக்கு மேல் சொத்துக்களை வைத்து மிக சிறப்பான ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் ஈஸ்வரன்.
ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர்.
எந்த நேரமும் தமிழக மண்ணுக்காக, ஈரோடு மக்களுக்காக ,
ஈரோடு மக்களின் முன்னேற்றத்திற்காக சிந்தித்தும், செயலாற்றியும் வந்தவர் நம்முடைய எம்ஏ ஈஸ்வரன் அவர்கள்.
1955 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஈரோடு ஒரு வானம் பார்த்த பூமியாக, பாலைவன பூமியாக இருந்து வந்தது.
ஆமணக்கு, பருத்தி மட்டுமே விளைந்த இந்த மண் வளம் கொழிக்கும் பூமியாக மாறி விடாதா என்று ஏங்கித் தவித்தவர் எம் ஏ ஈஸ்வரன் அவர்கள்.
ஒரு தனி மனிதனின் கனவு செயல்பாட்டு க்கு வந்தால் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு,
இன்று திரும்பிய பக்கம் எல்லாம் நெற்பயிரும், கரும்பும் ,மஞ்சளும் செழித்து வளர்ந்தோங்கி பசுமையாக காட்சியளிக்கும் ஈரோடே அதற்கு சாட்சி.
1945 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு எம் ஏ ஈஸ்வரன் போட்டியிட்டார்.
மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட தியாகியான எம் ஏ ஈஸ்வரன் தேர்தலில் போட்டியிட முன் வந்ததால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் போட்டியிலிருந்து விலகிவிட போட்டியின்றி வெற்றி பெற்றார்.
அப்போது பிரகாசம் தந்தூரி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்பதற்கு ஒரு ஓட்டு தேவைப்பட்டது. ஈஸ்வரனை அழைத்து பேசினார்கள்.
பவானி ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும் .அதற்கு ஒப்புக் கொண்டால் பிரகாசம் தந்தூரி தலைமையிலான அமைச்சரவைக்கு தன்னுடைய வாக்கினை அளிப்பதாக ஈஸ்வரன் கருத்து தெரிவித்தார்.
இதனை அடுத்து சென்னை மாகாணத்தில் பிரகாசம் தந்தூரி தலைமையிலான அமைச்சரவை அமைக்கப்பட்டது.
ஆனாலும் அணை கட்டுவது தாமதமாகிக் கொண்டே வந்தது.
தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 1948 முதல் 55 ஆம் ஆண்டு வரை அணைகட்டும் பணிகள் நடைபெற்று வெற்றிகரமாக ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
ஆனால் அந்த அணையின் திறப்பு விழாவிற்கு ஈஸ்வரன் அழைக்கப்படவில்லை. கல்வெட்டிலும் ஈஸ்வரனின் பெயர் இடம்பெறவில்லை .
பல ஆண்டுகள், பல்வேறு ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாத எம்.எ ஈஸ்வரனின் சீரிய முயற்சிகள் ஈரோடு சக்ராவின் கவனத்திற்கு வந்தது .
இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகார வர்க்கத்தின் கதவுகளை சத்ரா தட்டியதின் அடிப்படையில் பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் 45 நிமிடங்கள் பிரதமரிடம் ஈஸ்வரனின் முயற்சிகள் விளக்கி கூறப்பட்டது. அதனை தொடர்ந்து பாரத பிரதமர் மற்றும் மாநில அரசின் முயற்சிகளால் பவானிசாகர் அணையில் பகுதியில் ஈஸ்வரனுக்கு சிலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் விவசாய அருங்காட்சியம் ஒன்றும் ஈரோட்டில் அமைக்கப்பட உள்ளது. அனைத்திற்கும் சிகரம் வைப்பது போல தமிழகத்தையும் கேரள மாநிலத்தையும் இணைக்கும் முக்கிய ரயில் நிலையமான ஈரோடு ரயில் நிலையத்திற்கு ஈஸ்வரனின் பெயரை சூட்டப்படுவதற்கான முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு சக்ரா இதோடு ஓய்ந்துவிடவில்லை. தன் வாழ்நாள் முழுக்க தமிழக மக்களின் வாழ்க்கைக்காக, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக உழைத்து காலத்தால் மறந்து போன ஈஸ்வரனின் குடும்பத்தை தேடிப் புறப்பட்டது .இறுதியாக மிக சாதாரண நிலையில் மருத்துவச் செலவிற்கும், கல்விச் செலவிற்கும் கூட அலைமோதும் நிலையில் இருந்த அவர்களின் வாரிசுகளை கண்டெடுத்து தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையிடம் அறிமுகப்படுத்தி வைத்தோம் .
அவர் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி ஈஸ்வரனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அந்த பொதுக்கூட்டத்தில் விரைவில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு ஈஸ்வரனின் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது மட்டும் இன்றி சக்ராவின் முயற்சியில் எழுதப்பட்ட ஈஸ்வரம் என்ற தலைப்பிலான தமிழ் நூலினை இந்திய மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மிகப்பெரிய புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் அவர்கள் ஈஸ்வரன் போன்ற மாமனிதரின் வாழ்க்கை வரலாறு மொத்த இந்தியா முழுமைக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக அதனை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியிட பணித்துள்ளார். அதற்கான பணிகளையும் சக்ரா மேற்கொண்டுள்ளது.
ஈஸ்வரன் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டால் தான் இந்த தமிழ் மண்ணில் அறம் இன்னும் மீதி இருக்கும் என நம்பிக்கை தழைக்கும்.. என் குறிப்பிட்டுள்ளார்.