நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் பேசுகையில் -
அமெரிக்கா செனட் சபையில் சுமார் 26 முறை மோடியின் பேச்சைக் கேட்டு எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். உலகப் பெருந்தலைவர்கள் எல்லாம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி யை பாராட்டுகிறார்கள். மேக்கிங் இந்தியா என்று ராணுவ பாதுகாப்பு தளவாடங்களை இங்கே உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டது. 2024ல் வரும் பாராளுமன்ற தேர்தலில் திரு மோடி ஜி பிரதமர் ஆவார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனக் கூறினார்.