ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் கிராமத்திற்கு உட்பட்ட நாகர்பாளையத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஏ முருகன் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொடியேற்றி வைத்து கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அனைவரும் டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் கே பி கைலாஷ் குமார், டாக்டர் ஏ எம் காளீஸ்வரன், சக்திவேல், சுப்பிரமணி, சதீஷ், வேலு, பாலசுப்பிரமணியம், பாலு, இளங்கோவன், லோகநாதன், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா நாகர்பாளையத்தில் கொண்டாடப்பட்டது.
June 03, 2023
0