கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பிறந்தநாளையொட்டி ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ.முருகன் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.
June 06, 2023
0
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பிறந்தநாளையொட்டி கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாதிபாளையம், கொளப்பலூர், செங்கோட்டைன் நகர் மொடச்சூர் ஊராட்சி உள்ளிட்ட கிளைகளில் ஒன்றிய செயலாளர் சிறுவலூர் திரு.எஸ்.ஏ.முருகன் அவர்களின் தலைமையில், மாவட்ட பிரதிநிதியும் மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவருமான திரு. சரவணன் அவர்களும், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன் அவர்களும், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், மகளிர் அணியினர் மற்றும் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் கொடியேற்றி வைத்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.