முன்னதாக கபாடி வீரர்கள் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி கபாடி போட்டியில் விளையாடும் வீரர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் கபாடி போட்டியை நேரில் கண்டு ரசித்த அமைச்சர் போட்டியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிபடுத்திய கபாடி வீரருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபாடி கழக தலைவர் எப்எஸ்சி மற்றும் கேஎன்கேசி கபாடி குழு தலைவர் ராஜ்குமார், ரோட்டரி கிளப் தலைவர் திருவெங்கடசாமி, மாநில விவசாய அணி நிர்வாகி கள்ளிப்பட்டி மணி, மாநில நெசவாளர் அணி நிர்வாகிகள் சிந்து ரவிசந்திரன், மணிமாறன், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ.முருகன், நகர செயலாளர் என்.ஆர்.நாகராஜ், நகர்மன்ற உறுப்பினர் விஜய்கருப்புசாமி, இளைஞரணி அமைப்பாளர் திருவெங்கடம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.