கோபிசெட்டிபாளையத்தில், கோபி நகரம் 13 வது வார்டில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் மின் மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் பைப்பை பொதுமக்கள் உபயோகத்திற்காக திறந்து வைத்தார்.
அருகில் மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ், தகவல் தொழில் நுட்ப செயலாளர் முத்து ரமணன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், 13 வது வார்டு கவுன்சிலர் ரேவதி சண்முகம், அண்ணா கைத்தறி தொழிற்சங்கம் தலைவர் ரமேஷ் கிருஷ்ணன், 13 வது வார்டு செயலாளர் ஜிபி மணியன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.