ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், முக்கிய உணவு பொருட்களான தக்காளி முதல் வெங்காயம் வரை, பருப்பு முதல் அரிசி வரை விலை உயர்வு கட்டுப்படுத்த வேண்டும். அரசு டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கு.ப. வெள்ளிங்கிரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மற்றும் அவருடன் மாவட்ட பொதுச்செயலாளர் கதிரேஸ் குமார் கலந்து கொண்டார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு சார்பில் மக்கள் அனைவருக்கும் வீடு தோறும் குடிநீர், கிராமம் தோறும் சாலைகள் என பல்வேறு திட்டங்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முருகையன், காளியப்பன் மற்றும் கரட்டடிபாளையம், காசிபாளையம், நம்பியூர், கொளப்பலூர், கோபி சட்டமன்ற தொகுதி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.