கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் 21.07.2023 அன்று மாணவர்களுக்கான சுயமுன்னேற்ற பயிலரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பாசிபிள் ட்ரைனர்ஸ் என்ற மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் திரு. நம்பிராஜன் அவர்கள் கலந்து கொண்டு 'தடைகளை தகர்த்திடு' என்ற தலைப்பில் தன்னம்பிக்கை உரையாற்றினார்.
அவர்தம் உரையில், " நம்மிடம் உள்ள குறைகளை யோசித்துக்கொண்டே இருந்தால் நம்மால் வாழ்வில் முன்னேற இயலாது. குறைகளை பற்றி யோசிப்பதை குறைத்துக்கொண்டு நம்முடைய திறமைகளை மேம்படுத்திக்கொள்ள முயல வேண்டும். அதற்காக தொடர் முயற்சிகள் செய்யும்போது நம்முடைய குறைகள் யாருடைய கண்ணுக்கும் புலப்படாது. நம் திறமைகளைக் குறித்து மட்டுமே மக்கள் பேசுவர்" என்றார்.
இந்த மையக்கருத்தை பல்வேறு கதைகள், பெரிய விஞ்ஞானிகள், தலைவர்கள் வாழ்க்கை வரலாறு மூலமாக விளக்கி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டினார்.
முன்னதாக வேதியியல் துறை பேராசிரியர் திரு. ந. சுகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.தங்கவேல் அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைமுதல்வர், டீன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவி காவியாஸ்ரீ அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.