துணை இயக்குநர் சுகாதார பணிகள், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்தரவின்படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் தலைமையிலான குழுவினர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினரும்
கடைவீதி மற்றும் அனுமந்தராயன் கோயில் வீதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் கைப்பற்றப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துடன் ரூபாய் 4000 வரை அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் எதுவும் ஆய்வில் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.