இதில் திரு. கே.சி. கருப்பணன் செயலாளர் மற்றும் பவானி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு, கல்லூரியில் படித்து உயர்வு பெற்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தொடர்பு கொண்டு நன்றி கூறியதாகவும் கூறினார்.
முதல்வர்.முனைவர்.அ. மோகனசுந்தரம் அவர்களின் உரையில் - உயர்கல்வி படிக்கும் மாணவர்களுடைய சமூகப் பொறுப்பினை பற்றி பேசினார். "சமூகத்தில் ஏழையாக பிறந்து கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள், வறுமைக்கோட்டிற்கு கீழே வாடும் குழந்தைகள் இப்படி சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. பிரச்சனைகளை தீர்வு காண வேண்டிய பொறுப்பு கல்லூரி மாணவர்களிடையே இருக்கிறது. அவர்கள் தங்களுடைய கல்லூரியின் பெயரில் தங்களுடைய ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பெற்று பல்வேறு விதமான புள்ளிவிவரங்களை சேகரித்து சில சமூக பிரச்சனைகளை விஞ்ஞான ரீதியாக தீர்வு காணலாம்" என்று ஆலோசனை கூறினார்.
மேலும் துணை முதல்வர்.சி நஞ்சப்பா அவர்கள் "இன்றைய தலைமுறை வாழ்வின் மேம்பாட்டிற்கு கல்வி மற்றும் திறமை இரண்டு மட்டுமே துணையாக இருக்கும். சமூக சாதிய ஆவணங்கள் அவலங்களை உடைத்து எரியும் மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்து பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உயர்ந்த இடத்தை அடைய தங்களுக்கு கிடைத்த கல்லூரி வாய்ப்பினை செம்மையாக பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
சிறப்பு விருந்தினர் முனைவர்.சி. பரமசிவன், தந்தை பெரியார் அரசு கல்லூரி திருச்சிராப்பள்ளி அவர்கள் பேசுகையில், கல்வி என்பது ஏற்றத்தாழ்வுகளை போக்கும், மனிதனை ஆற்றல் உடையவனாக மாற்றும், செல்லும் இடம் எல்லாம் சிறப்பினை தேடித்தரும் என்றும், தமிழகத்தில் உயர்கல்வி இருந்தாலும் 50 சதவீத பள்ளி மாணவர்கள் தான் கல்லூரி மாணவர்களாக உயர்வு பெறுகின்றனர். மீதமுள்ள 50 சதவீதம் மாணவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது என்று கூறினார். மேலும் மாணவர்களின் திறன் தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக முனைவர்.ம.சே. கோமதி அனைவரையும் வரவேற்றார். முனைவர். அ.சவிதா நன்றியுரை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.