கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்களை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் சசிகலா அவர்களின் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஜயன், பழனிச்சாமி, சக்திவேலு, விஸ்வநாதன் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக பேருந்து நிலையம், மொடச்சூர் ரோடு, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள், சாலையோர வியாபாரிகள், பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் 36 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ரெய்டு நடத்தினர்.
மேற்படி ரெய்டில் கடைகளில் இருந்து சுமார் ரூ.10,000 மதிப்பிலான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், குழம்பு கவர்கள், அட்டை கப்கள் போன்றவற்றை பறிமுதல் செய்ததுடன் 7 கடைகளுக்கு மொத்தம் ரூ. 5,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது போன்ற பிளாஸ்டிக் ரெய்டு தொடர்ந்து நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.