கோபிச்செட்டிபாளையம் ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் கல்லூரியில் 22. 08. 2023 நேற்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆப் பிசியோதெரபி & ஆக்குபேஷனல் தெரபி, வாசன் கண் மருத்துவமனை, மோகன் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தன்னார்வ இரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை, நீரழிவு மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.
பிசியோதெரபி & ஆக்குபேஷனல் தெரபி மாணவர்கள் பங்கு பெற்று ரத்ததானம் செய்தனர்.
கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் நந்தகுமார் ராமசாமி மற்றும் துணை முதல்வர் பேராசிரியர் வனிதா ஆகியோர் இந்த நிகழ்விற்கு தலைமை வகித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.