கோபிசெட்டிபாளையம் ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வராபாரா மெடிக்கல் கல்லூரியில்
11. 08. 2023 இன்று "போதை இல்லா தமிழகம்" என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் நந்தகுமார் ராமசாமி மற்றும் துணை முதல்வர் பேராசிரியர் வனிதா ஆகியோர் இந்த நிகழ்விற்கு தலைமை வகித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.