ஈரோடு மாநகராட்சி 43 வது வார்டில் உள்ள காரை வாய்க்கால் பகுதியில் ரோடு மற்றும் பல்வேறு ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது என்றும் அதை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கவுன்சிலர் சபுராமா சாதிக் அவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பேசினார்.
மேலும் இது தொடர்பாக மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியத்திடமும் அவர் மனு கொடுத்தார்.
இதை தொடர்ந்து 43, 52 மற்றும் 53 வது வார்டுகளில் பழுதடைந்துள்ள ரோடுகளை சீரமைக்க ரூ.3 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரன் தலைமையில் நடந்து. இந்த நிகழ்ச்சியில் மேயர் நகரத்தினம் சுப்ரமணியம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் செல்வராஜ், தலைமை பொறியாளர் விஜயகுமார் , கவுன்சிலர் சபுராமா சாதிக், காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட முன்னாள் தலைவர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், காங்கிரஸ் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் மற்றும் அம்ஜத், பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.