தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டமானது ஈரோட்டில் அதன் மாவட்ட தலைவர் ஆர். குருநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பரமசிவம் விளக்க உரையாற்றினார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் சதீஷ், நல்ல கவுண்டர், காயத்ரி, நல்லம்மாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் மாநில தலைவர் ஆர். ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிறைவுரை நிகழ்த்தினார். கூட்டத்தில் அனைத்து வட்டக் கழங்களிலும் செயற்குழு கூட்டங்கள் நடத்துவது மேலும் அனைத்து வட்டக் கழகங்களிலும் கொடியை ஏற்றி கல்வெட்டு திறப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக சங்க கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன் நன்றியுரை ஆற்றினார்.