நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மக்கள் பங்களிப்புடன் சிறப்பு சுத்தம் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நகரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக நகரத்தில் உள்ள சமுதாய நல நோக்கத்துடன் செயல்படும் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் பங்கேற்புடன் நகரில் உள்ள மழைநீர் ஓடைகள் தூர் வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் தலைமையில், நகராட்சி ஆணையாளர் சசிகலா அவர்கள் முன்னிலையில் கமலா ரைஸ்மில் வீதியில் நடைபெற்ற மழைநீர் ஓடை தூர் வாரும் பணிகளில் நகரில் உள்ள சமுதாய நல சங்கங்களான கோபிசெட்டிபாளையம் அனைத்து வியாபாரிகள் நல சங்கம், கோபிசெட்டிபாளையம் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், அறிஞர் அண்ணா அனைத்து மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், கோபி ரோட்டரி சங்கம், கோபி உழவன் ரோட்டரி சங்கம், கோபி அரிமா சங்கம், கோபிசெட்டிபாளையம் அனைத்து மருந்து வியாபாரிகள் நல சங்கம், கோபிசெட்டிபாளையம் கட்டிட பொறியாளர்கள் நல சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக் சௌந்தரராஜன், 17 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நித்யா மெய்யழகன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.