நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இன்று சர்க்கரை பொங்கல் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திமுக சார்பில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவரும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பிரதிநிதியுமான சேர்மன் செல்வராஜ் மற்றும் பள்ளிபாளையம் நகர்மன்ற துணைத்தலைவர் பாலமுருகன், பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் குமார், நகரவை தலைவர் குலோப்ஜான், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ் மற்றும் பள்ளிபாளையம் திமுக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவிகளுக்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.