Type Here to Get Search Results !

ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு விழா...

ஈரோடு மனவளக்கலை மன்றம் டிரஸ்ட், ஈரோடு அறிவுத்திருக்கோவில், உலக சமுதாய சேவா சங்கம் ஆகியன சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா ஈரோடு கொங்கு கலை அரங்கத்தில் நடைபெற்றது. 

 மனைவி நல வேட்பு குறித்து உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் பேராசிரியர் உழவன் தங்கவேல் பேசினார். பின்னர் திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பில் பேசினார். அதைத்தொடர்ந்து மனைவியை கவுரவிக்கும் விதமாக கணவர்கள் தங்களது மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவிகள் தங்களது கணவருக்கு பழம் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து தம்பதிகள் கைகளை கோர்த்து கொண்டு தியானம் செய்தனர்.

 இந்த விழாவில் கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வி.பாலுசாமி, பி.கே.பி. கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.கே.பி.அருண், ஈரோஅக்குவா நிறுவன நிர்வாக இயக்குனர் பி.மோகன், ஆகவி நிறுவன உரிமையாளர் கமலநாதன், சண்முகா குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜமாணிக்கம், அக்னி ஸ்டீல்ஸ் நிறுவன செயல் இயக்குனர் தங்கவேல், தீபா மெடிக்கல்ஸ் பூபதி, டிப்டாப் நிறுவனங்களின் உரிமையாளர் குமரவேல், மாயவன் ஸ்பின்னிங் நிறுவனத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஆகியோர் உள்பட ஏராளமானோர் தம்பதியாக பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.