காரை வாய்க்கால் நாகர் கோவிலில் ஆவணி அவிட்டம் விழா நடந்தது. பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனா். ஈரோடு காரை வாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில் பக்தர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆவணி அவிட்டம் விழா காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர். இதையொட்டி 30.08.2023 நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.