ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க கோரி பவானிசாகர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஈரோடு மாவட்டம் காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் சி.சங்கர், மனு அளித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை மாநில துணைத்தலைவர் ஆர்.காந்தி முன்னிலையில், பவானிசாகர் நகர செயலாளர் நாகமயன், பவானிசாகர் வட்டார தலைவர் எஸ்.வேலுமணி, டி.கே.எஸ் வடக்கு வட்டார தலைவர் சிதம்பரம், பவானிசாகர் நகர துணை தலைவர் சந்தானகிருஷ்ணன், பவானிசாகர் பேரூராட்சி கவுன்சிலர் தனகோபால், சந்தானம் மற்றும் பலருடன் சேர்ந்து மனு கொடுத்தனர்.
பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க கோரி மனு...
August 31, 2023
0