இந்நிகழ்ச்சியில் திரு.M.N. நம்பிராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகள் தங்களது வாழ்வில் எவ்வாறு படிப்படியாக முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் பெஞ்சமின் பிராங்க்ளின் வாழ்க்கை வரலாறை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் கல்லூரி முதல்வர் திரு.S.பிரகதீஸ்வரன் அவர்கள் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் திரு.K.C. கருப்பணன், கல்லூரி தலைவர் திரு.P.வெங்கடாசலம், கல்லூரி இயக்குனர் K.கவியரசு, முதன்மை செயல் அலுவலர் G.கௌதம் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் இருபால் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் துணை முதல்வர் திரு.P.மணி அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறைத்தலைவர் திரு.K.ஜெயச்சந்திரன் செய்திருந்தார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் "சாதித்து வாழ்வோம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஊக்குவித்தல் நிகழ்ச்சி...
August 01, 2023
0
கவுந்தப்பாடி அருகில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் "சாதித்து வாழ்வோம்" என்ற தலைப்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஊக்குவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.