கோபி ஒத்தக்குதிரையிலுள்ள வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுக்கு ஒருநாள் பயிற்சி 01.08.2023 நேற்று நடைபெற்றது.
புதிதாக இணைந்த முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ தன்னார்வலர்கள் நூறு நபர்களுக்கு இப்பயிற்சி நடைபெற்றது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை இப்பயிற்சியில் பேசும் போது இத்திட்டத்தினால் மாணவ சமுதாயம் பெறும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். மத்திய மாநில அரசுகளின் என்.எஸ். எஸ் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி பேசினார். இத்திட்டத்தினால் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமைகள் சலுகைகள் பற்றி விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியின் முதலில் துவக்க உரை நிகழ்த்திய கல்லூரி முதல்வர் ஆ. மோகனசுந்தரம் பேசும் போது இத்திட்டத்தின் நோக்கம் இத்திட்டத்தின் வரலாறு பற்றி அறிமுக உரையாற்றினார்.
கோபி கலை அறிவியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் அழகரசன் அவர்கள் கிராமங்களில் அவர் நடத்திய சிறப்பு முகாமின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
துணைமுதல்வர் நஞ்சப்பா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார் வரவேற்புரை வழங்கினார், பேராசிரியர்கள் அஜித்குமார், காயத்ரி ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். இறுதியில் இரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.