Type Here to Get Search Results !

ஈரோட்டில் திமுக மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி நடராஜன் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் மனு கொடுக்கப்பட்டது...

ஈரோட்டில் திமுக மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி நடராஜன் தலைமையில் மகளிர் அணி, தொண்டர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் மனு அளிக்கப்பட்டது.


மனு குறித்து மாநகர மகளிர் அணி அமைப்பாளர்  கனிமொழி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரையில் கடந்த இருபதாம் தேதி  நடைபெற்ற அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள், கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் குறித்து அநாகரிகமாகவும், அருவருக்கத் தக்க வகையிலும் தனிப்பட்ட முறையில் அவர்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாகவும் தனிமனித விமர்சனத்திலும் அங்கு நடந்த கலை நிகழ்ச்சி மூலம் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அங்கே அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட பலரும் கைத்தட்டி ரசித்து பார்த்தனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக் காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

குறிப்பாக கனிமொழி எம்.பி.யை பெண் என்றும் பாராமல் மோசமாக விமர்சனம் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். திமுகவை பொருத்தவரை மாற்றுக் கட்சியை சேர்ந்த குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரையும் தனிமனித விமர்சனத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் பொது மேடையில் ஆபாச வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்த நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதனை ரசித்துப் பார்த்த எடப்பாடி பழனிசாமியின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.

எனவே அநாகரிக்கமாகவும் ஆபாசமாகவும் பேசிய நபர்களை கைது செய்வதுடன் அவர்களுக்கு ஆதரவாக இருந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகளிர் அணி, தொண்டர் அணி, வழக்கறிஞர் அணியின் சார்பில்
மாவட்ட எஸ் பி அவர்களிடம் மனு கொடுத்து இருக்கிறோம்.

பொது நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம் என்று 
கனிமொழி நடராஜன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.