ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் உள்ள சாலையில் மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இந்த பகுதியில் ஜவுளி, நகைக்கடை, சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ளனர்.
பொதுமக்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அதிகம் கூடுவதால் பெரும் நெருக்கடியாக உள்ளது.
இப்பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும்போது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த சாலையில் போக்குவரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை சந்திப்பு வாகனங்களும், பாதசாரிகளும் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் வாகன போக்குவரத்தை சோதனை அடிப்படையில் தற்காலிகமாக மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் முடிவு செய்துள்ளது.
இதன்படி திருவேங்கடம் வீதிக்கு பிரதான சாலையில் இருந்து வடக்கு நோக்கி மட்டும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் 24.08.23 இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டது.
மறுவழியில் வரும் வாகனங்கள், ஈஸ்வரன் கோவில் வழியாக மீனாட்சி சுந்தரனார் சாலையில் இணையலாம். அல்லது மணிக்கூண்டு சந்திப்பினை கடந்து பெரியார் மன்றம் சந்திப்பின் வழியாக பன்னீர்செல்வம் பூங்காவை அடையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் போக்குவரத்து போலீசுக்காக வைக்கப்பட்டுள்ள நிழற்குடையை அகற்றப்பட்டு விட்டது.
இது போல இந்த பகுதியில் பொது மக்கள் கடந்து செல்லும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருவேங்கடசாமி வீதியில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தனர்.