நம்பியூர் வட்டாரத்தில், கடத்தூர் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவ தயாளன் அவர்கள் தலைமையில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்து உழவர் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் விதை சான்றுஅலுவலர் மாரிமுத்து அவர்கள் வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியதோடு அதன் நன்மைகள் மற்றும் சான்று பெறுவதற்கான நடைமுறைகள், இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறைகளைப் பற்றி, உழவர் தொகுப்புகள் உருவாக்குதல் போன்றவற்றை தெளிவாக விளக்கி கூறினார். நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவ தயாளன் அவர்கள் வேளாண்மை முறையில் பயிர் சாகுபடி செய்வதால் என்னென்ன பயன்கள் என்பது குறித்து பேசினார்.
துணை வேளாண்மை அலுவலர் வெங்கட்சாமி திட்ட செயலாக்கம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மெய்யரசு மற்றும் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.