ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
"பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் சாலை அமைத்தல், சுங்கச்சாவடி, இறந்தவர்களின் பெயரில் மோசடியாக காப்பீடு பெறுதல் உள்ளிட்டவைகளின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முறைகேடுகள் மூலம் இதுவரை நடந்திராத ஊழல் நடந்துள்ளது. மத்திய தணிக்கை குழு மத்திய அரசின் மீதான ஊழல்களை தெரிவித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கு தொடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் தமிழக ஆட்சிக்கு இடைஞ்சல் தரும்
தமிழக கலெக்டராக உள்ள ஆளுநர் ரவி க்கு தலை முதல் பாதம் வரை கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது.
உணர்ச்சி அதிகம் உள்ள திமுகவினர் முதல்வரின் சொல்லுக்கு ஏற்ப அமைதியாக உள்ளனர்.
ஆளுநர் ரவி சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒழுங்காக அவர் ஒப்புதல் தர வேண்டும், இல்லையெனில் மக்கள் தமிழக மக்கள் கிண்டியிலிருந்து கீழ்பாக்கத்துக்கு அனுப்பி ஆளுநருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். ஏழு கொலை வழக்குகளில் தொடர்புடையவராக கூறப்படும் உத்தர பிரதேச முதல்வர் யோகியின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது சங்கடமாக உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.