பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது...
September 13, 2023
0
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் அவல் பூந்துறை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் அவல் பூந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவருமான சு.குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அவல் பூந்துறை பேரூராட்சி துணை தலைவர் சோமசுந்தரம், வார்டு கவுன்சிலர்கள் தங்கவேல், துரை மற்றும் நந்தகுமார், அவல்பூந்துறை பேரூர் கழக செயலாளர் சண்முகசுந்தரம், கழக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், மூர்த்தி, தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
Tags