இந்த பயிலகத்தில் நிதி முதலீடு, நிதியை கையாளுவது பற்றிய ஆலோசனை மற்றும் சேமிப்பு பற்றிய சிறந்த கருத்துக்களை மாணவர்கள் தெரிந்து கொண்டனர். அதன் பின்பு பி ஆர் அகாடமி பிரைவேட் லிமிடெட்., கோயம்பத்தூர் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இடையே புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இறுதியாக மூன்றாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவி முத்துலட்சுமி நன்றி உரை வழங்கினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிதி வலுவூட்டல் மற்றும் மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலகம் நடைபெற்றது...
September 13, 2023
0
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறையின் சார்பாக நிதி வலுவூட்டல் மற்றும் மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலகம் நடைபெற்றது. இதில் திரு. ராஜசேகரன் உன்னி, இயக்குநர் பிரியதர்ஷினி ரமேஷ், வணிக மேம்பாட்டு மேலாளர் M. மணிக்குமார், இணை இயக்க மேலாளர் BR அகாடமி பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த பயிலகத்தை மூன்றாம் ஆண்டு மாணவி D. பவித்ரா வரவேற்று பேசினார். அதன் பின்பு கல்லூரியின் முதல்வர் முனைவர் A. மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் C . நஞ்சப்பா மற்றும் மேலாண்மை துறை தலைவர் முனைவர் P. ராஜசேகர் சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தனர்.