தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி. கா. பழனியம்மாள் அவர்களின் சீரிய கல்விப் பணியை போற்றும் வகையில் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது (2022-2023) வழங்கப்பட்டது.
விருது பெற்ற ஆசிரியர் திருமதி. கா. பழனியம்மாள் அவர்களை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று சந்தித்து சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ.பிரப், பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.