ஈரோட்டில் உள்ள ஏ.ஈ.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கீழ்பவானி பாசன சங்க தலைவர் பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். மேலும் அவர் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் மோகன ராமகிருஷ்ணன், பொருளாளர் தீபா, அறக்கட்டளை உறுப்பினர் பிரித்திவியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அறக்கட்டளை உறுப்பினர் ஜெயஹரிணி அவர்கள் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை கூறி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மழலையர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பாட்டுப்பாடி நடனமாடினர். இதில் கோவர்த்தன மலையை கண்முன் நிறுத்தி சிறப்பாக நாடகம் நடத்தினர்.
கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் தொகுத்து வழங்கினார்கள்.