கோபி தெற்கு ஒன்றியம் சிறுவலூர் ஊராட்சி நால்ரோடு பகுதியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் எஸ். ஏ.
முருகன் தலைமையில்,
பொதுக்குழு உறுப்பினர் எஸ். எஸ். வெள்ளியங்கிரி ஏற்பாட்டில், ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. கே. செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சி. எஸ். கோதண்டபாணி, கே. சி. மூர்த்தி, அமராவதி நாராயணன், பேரூர் கழக செயலாளர்கள், கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு ஆறுமுகம் க. வே.சு. வேலவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் பேரறிஞர் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கழக அரசின் சாதனைகளை துண்டரிக்கை யாக வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக, கிளை கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.