தென்னிந்திய திரைப்படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து வருவது மகிழ்வை தருவதாக நடிகை ராதிகா தெரிவித்தார். ஈரோடு பெருந்துறை சாலையில் கே.பி.கே. பெட்ரோல் பங்க் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வைஷாலி சில்க்ஸ் ஜவுளி ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
புதிய ஷோரூமை திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
புதிய ஷோரூமை நடிகை ராதிகா சரத்குமார் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது
"ஈரோடு போன்ற நகரங்களில் வைஷாலி சில்க்ஸ் போன்ற பொட்டிக் ஜவுளி விற்பனை ஷோரூமை ஏற்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. குறிப்பாக இந்த ஷோரூமின் பெண் தொழில் முனைவோரான கிருத்திகா போன்றவர்களின் முயற்சியை நான் பெரிதும் வரவேற்கிறேன்."
என்றார் ராதிகா.
முன்னதாக, மாருதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நிர்மலா சதாசிவம், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
விழாவில் பங்கேற்றவர்களை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் மேனேஜிங் டிரஸ்ட் மற்றும் அறம் சாரிடி டிரஸ்ட் செயல் இயக்குநர் கிருத்திகா சிவகுமார் வரவேற்றார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள வைஷாலி சில்க்ஸில் முன்னணி பிராண்டட் நிறுவனங்களின் காட்டன் சில்க்ஸ் புடவைகள், அனைத்து ரக பட்டுப் புடவைகள், சுடிதார்கள், குர்தீஸ் என பல்வேறு வகையான ஆடைகள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது.