அருள்மிகு ஸ்ரீ ஓங்காளி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா...
September 19, 2023
0
ஈரோடு மாநகர் மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ளது நூறு ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஓங்காளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 15ஆம் தேதி அன்று விநாயகர் பூஜை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 16ஆம் தேதி சனிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தொடர்ந்து காலை 7 மணிக்கு மங்கல இசை விநாயகர் பூஜை மும்மூர்த்திகள் ரக்ஷா பந்தனம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 10 15 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் கோபுரத்தில் அமைந்துள்ள கும்பக்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ அரசு வேம்பு விநாயகர், ஸ்ரீ நைருதி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன் திருக்கோவில் குழுவினர் செய்திருந்தனர்.
Tags