Type Here to Get Search Results !

தங்கம் வென்ற தலைமை காவலரை ஈரோடு மாவட்ட S P ஜவகர் பாராட்டினார்...

ஈரோடு மாவட்டம், கோபி போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலராக 2595 பணிபுரியும் திரு. சரவணகுமார் என்பவர்  18.09.2023 நேற்று மலேசியா - கோலாலம்பூரில் உலக அளவில் நடைபெற்ற  35 வது Malaysian international Open Masters Athletic Championship சர்வதேச தடகளப் போட்டியில் கலந்து கொள்ள காவல் துறை தலைமை இயக்குனர் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று, மேற்படி போட்டியில் பங்கு பெற்றார். 

சர்வதேச தடகளப் போட்டியில் கலந்து கொண்ட தலைமை காவலர் அவர்கள்  வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று தமிழகத்திற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

மேலும் மேற்கண்ட சர்வதேச போட்டியில் பங்குபெற்று பதக்கம் வென்ற தலைமை காவலரை
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. ஜவகர், இ.கா.ப., அவர்கள்
பாராட்டினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.