ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து இந்து சமய திருக்கோயில்கள் நலச்சபை தலைவர் தினேஷ்குமார் தலைமையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு கொடுத்தார்கள்.
அந்த மனுவில் கூறியதாவது,
ஊஞ்சலூர் கிராமம் புல எண் 238/15 ல் அருள்மிகு மாடப்பசுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலை சுற்றி அமைந்துள்ள புல எண் 238/18 பஞ்சாயத்து தெரு பகுதியாகும். இந்த அரசு நிலத்தை சிலர் ஆவணம் செய்து கொண்டு சுவாமி வழிபாடு செய்வதற்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த அரசு நிலத்தை கொண்டு செய்துள்ள ஆவணத்தை இரத்து செய்யுமாறும் அரசு நிலத்தை விற்றவர்களையும் வாங்கியவர்களையும் கைது செய்யுமாறும், மேலும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி எங்களுக்கு சுவாமி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
என கூறப்பட்டுள்ளது. இதில் மாவட்ட செயலாளர் பாரதி ஆலய பாதுகாப்பு பிரிவு சுரேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.