இந்நிகழ்வில் கலந்து கொண்ட அவர் பத்திரிகையாளர் பேட்டியளித்தார், அதில்,
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து இனிமேல் தான் தெரியவரும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும், அவ்வாறு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வந்தாலும் 2026 இல் கூட இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல என்றும்,
கடந்த 70 ஆண்டு காலமாக பிராமணர் சமுதாயம் உட்பட இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசினுடைய எந்த சலுகைகளையும் அனுபவிக்க முடியாமல் இருந்து கொண்டிருப்பவர்கள், தலைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கொடுங்கள் என்ற பெரியார் வார்த்தைக்கு ஏற்ப இன்று வரை நடைபெறவில்லை என்றும்,
ஓபிஎஸ் தனி கட்சி துவங்குவதற்கு வாய்ப்பு உள்ளது, ஒருங்கிணைந்த அதிமுக என்பது ஒரு மிகப்பெரிய பலம், இரட்டை இலை சின்னத்திற்கு தான் முதல் மரியாதை, யார் கட்சியில் செல்வாக்காக உள்ளனரோ அவர்கள் பின்னால் கட்சித் தொண்டர்கள் செல்லும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்காது, அதிமுக தலைமையில் தான் நடக்கும் என்றும், டெல்லியில் பாஜக தான் பெரிய கட்சி, தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, இது பாஜக மூத்த தலைவர்களுக்கும் தெரியும் என்றும்,
பாஜக தலைவர் பதவியை நான் கேட்கவே இல்லை எனக்கு அது வேண்டவும் வேண்டாம், மாதம் 10 அனாதை பிணங்களை அடக்கம் செய்கிறேன் இதைவிட தலைவர் பதவி பெரிதா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஊழல் என்பது ஊ லாலா மாதிரி ஆகிவிட்டது, லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலையை செய்து கொடுப்பவர்கள் நல்லவராம், இதுவரை 90 படம் நடித்துள்ளேன் 195 படங்கள் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன் என்றும், விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது, எம்ஜிஆர் தனது ரசிகர்களை எவ்வாறு கட்டமைத்து வைத்திருந்தாரோ அதே போன்ற அளவிற்கு நடிகர் விஜய் தனது ரசிகர்களை கட்டமைத்து வைத்துள்ளார், ஆனால் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று தான் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக அரசு கொண்டு வந்த காலை உணவு திட்டம் நல்ல விசயம், ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுகின்ற குடும்பங்கள் எவ்வளவோ இருக்கின்றன, ஒரு ஏழையின் பசியும் வலியும் தெரியாதவன் பொது இடத்தில் இருப்பதற்கு யோகிதையற்றவகள்,
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களை பெற்று பிரதமர் மோடி 3 வது முறையாக ஆட்சி அமைப்பார் என்றும் கூறியுள்ளார்.