இந்து மதத்தின் சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக கோபி, சத்தி, தாளவாடி, ஆசனூர், பவானி, புளியம்பட்டி, கவுந்தப்பாடி, சித்தோடு, அந்தியூர், நம்பியூர், கடத்தூர், பங்களாப்புதூர், சிறுவலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் மனு கொடுக்கப்பட்டது.