முத்தமிழறிஞர் டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோபியில் நடந்த நடை பேரணி மற்றும் ரத்ததான முகாமை கனிமொழி, என். வி. என். சோமு, எம்.பி.எழிலன், நாகநாதன் எம். எல். ஏ. ஆகியோர்தொடங்கி வைத்தனர். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் ரத்த தானம் செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் செந்தில்நாதன், மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், சிறுவலூர் எஸ்.ஏ. முருகன், கோபிசெட்டிபாளையம் நகர மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சுதாகர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.